செஸ் ஒலிம்பியாட் போட்டி: 4 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற உள்ளது.;
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆக. 27-ஆம் தேதி (நான்காவது சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.