ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டி

ரிஷிவந்தியம் அரசு பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது.

Update: 2022-07-22 16:53 GMT


ரிஷிவந்தியம், 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. இதையொட்டி பள்ளி கல்வித்துறை சார்பில் ரிஷிவந்தியம் வட்டார அளவிலான செஸ் போட்டி ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளி மாணவர்கள் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.


போட்டியை ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் வனிதா மகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயந்தி சிவக்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் கவிதா, உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி அலுவலர் பாலாஜி கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட சதுரங்க செயலாளர் ரவி, அருண், சந்துரு, உடற்கல்வி இயக்குனர் நெப்போலியன் தனசெல்வன் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பாலு, வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்