குமாரபாளையத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கேரம், செஸ் போட்டி
குமாரபாளையத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கேரம், செஸ் போட்டி
குமாரபாளையம், செப்.21-
ஈரோடு மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கேரம் மற்றும் செஸ் போட்டி குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் தொடக்க விழா ராகவேந்திரா கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளரும், அட்மா தலைவருமான யுவராஜ் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 24 பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.