சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.;

Update: 2022-12-27 20:31 GMT

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் 89.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 90.95 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1999.17 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 807.25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மணிமுத்தாறு அணையில் நேற்று முன்தினம் 88.86 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 89.58 அடியாக உயர்ந்துள்ளது. 95.83 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 100 அடியை தாண்டியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100.26 அடியாக இருந்தது. தென்காசி மாவட்டத்தில் கடனா அணை நீர்மட்டம் 70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 77.50 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 34 அடியாகவும் உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்