சேர்வைக்காரன்மடம்பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
சேர்வைக்காரன்மடம் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில், வினைதீர்க்கும் விநாயகர், ஸ்ரீமன் நாராயணசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மங்கள இசை, விக்னேசுவர பூஜை, மகா கணபதிஹோமம், கோபூஜை, தீபாராதனை, பூர்ணாகுதியும், 8 மணிக்கு விக்னேசுவர பூஜை, சதர்சன ஹோமம், தனபூஜை, மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு முதல் யாகசாலை பூஜை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மங்கள இசை, விக்னேசுவர பூஜை, 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வினைதீர்க்கும் விநாயகர் விமான அபிஷேகமும், விநாயகர் கும்பாபிஷேகமும், ஸ்ரீமன் நாராயணசுவாமி ராஜகோபுரம், விமான அபிஷேகம், கும்பாபிஷேகம், பத்திரகாளியம்மன் கோவில் விமான அபிஷேகம், அம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை புதுக்கோட்டை அரிகரசுப்பிரமணிய அய்யர் நடத்தி வைக்கிறார். பின்னர் சிறப்பு பூஜைகள், மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதியம் 12.30 மணிக்கு அன்னதானமும், இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆர்.கணேஷ் நாடார், நிர்வாக சபை உறுப்பினர்கள் ராமலிங்கம், வேல்துரை, தங்கராஜா, சுரேஷ், லிங்கம் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.