ஊட்டியில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் - சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு...!

ஊட்டி-மஞ்சூர் செல்லும் சாலையோரங்களில் பல இடங்களில் செர்ரி மலர்கள் பூத்துள்ளதால், இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.;

Update: 2022-08-24 09:49 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், கைகாட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் ஒரு சில இடங்களில் செர்ரி மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரங்களில் வழக்கமாக நீலகிரியில் இரண்டாவது சீசன் ஆரம்பிக்கும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செர்ரி பூத்துக் குலுங்கும். மேலும் ஜனவரி மாதம் வரை இந்த பூக்களை சாலையோரம் காணலாம்.


இந்த நிலையில் இந்த ஆண்டு சற்று முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இந்த பூக்களை அந்த வழியாக செல்லும் உள்ளூர் மக்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். மேலும் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். பொதுவாக இந்த பூக்கள் குளிர் அதிகமாக நிலவும் இடங்கள், குறிப்பாக சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன.


Tags:    

மேலும் செய்திகள்