சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தைப்பூச தேர்த்திருவிழா

Update: 2022-12-12 19:30 GMT

சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி தேர் முகூர்த்த விழா நேற்று சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நடைபெற்றது. இதற்காக கோபூஜை, விநாயகர் வழிபாடு பஞ்சகவ்ய பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

வேல் ஊர்வலம்

அதைத்தொடர்ந்து முருகப்பெருமானின் வேல் மற்றும் கைலாசநாதர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தைப்பூச தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதைத்தொடர்ந்து தேர் திருவிழாவினை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் தேர் ஓடும் வீதியான சென்னிமலையின் 4 ராஜ வீதிகளில் முருகப்பெருமானின் வேல் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்