சென்னை விம்கோ நகர் பணிமனை விரைவில் செயல்பட தொடங்கும் - மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு

விம்கோ நகர் பணிமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.;

Update:2023-02-26 18:23 IST

சென்னை,

சென்னையில் தற்போது 52 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ரெயில்களை பராமரிப்பதற்காக விம்கோ நகரில் பிரம்மாண்ட மெட்ரோ பணிமனை அமைக்கப்பட்டது. இந்த பணிமனை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்மையில் மூடப்பட்டது.

இதன் காரணமாக தற்போது கோயம்பேட்டில் உள்ள பணிமனையில் மெட்ரோ ரெயில்கள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விம்கோ நகர் பணிமனை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்