சென்னையில் வரும் நாட்களில் விட்டுவிட்டு காலை - இரவு நேரங்களில் மழை பெய்யும் -தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் இனி வரும் நாட்களில் விட்டுவிட்டு காலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறி உள்ளார்.;

Update: 2022-10-11 07:16 GMT

windy.com

சென்னை

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிர்பார்த்தது போல் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இனி வரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யும். இன்று தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். அது போல் சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

சென்னையில் தென் கிழக்கு பகுதி முதல் திடீர் திடீரென மழை இரவு மற்றும் காலை நேரங்களில் பெய்யும். 15 ஆம் தேதி முதல் கிழக்கத்திய காற்று வீசுவது தொடங்கும். இதனால் அடுத்த 10 நாட்களில் வங்கக் கடலில் காற்றழுத்தம் (சங்கு சக்கரம்) உருவாகும். இனி வரும் நாட்கள் சுவாரஸ்யமானவை என கூறியுள்ளார் வெதர்மேன். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்