மாநில நீச்சல் போட்டியில் சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன்

மதுரையில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.

Update: 2023-02-27 21:32 GMT


மதுரையில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சென்னை அணி வென்றது.

மாநில நீச்சல் போட்டி

தமிழ்நாடு நீச்சல் சங்கம், மதுரை மாவட்ட நீச்சல் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான ஷார்ட் கோர்ஸ் என்னும் நீச்சல் போட்டியை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த 2 நாட்கள் நடத்தின. இதில் சென்னை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 28 மாவட்டத்தைச் சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டிகள் வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக நடத்தப்பட்டன. போட்டியின் முடிவில் 478 புள்ளிகள் பெற்ற சென்னை டால்பின் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 350 புள்ளிகள் பெற்று சென்னை டேர்டில்ஸ் அணி 2-ம் இடம் பிடித்தது.

தனிநபர் பிரிவில் சாதித்தவர்கள்

போட்டியில் தனி நபர் பிரிவில் பதக்கம் பெற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

சீனியர் ஆண்கள் பிரிவில் அன்புகதிர் (நெல்லை டைட்டன்ஸ்), பெண்கள் பிரிவில் செல்வரேவதி (நெல்லை)

குரூப் 1 ஆண்கள் பிரிவில் ஸ்ரீராம் (சென்னை டேர்டில்ஸ்), பெண்கள் பிரிவில் ஹாய்தயாபவ்லியா (நெல்லை).

குரூப் 2 ஆண்கள் பிரிவில் ரோனல் ரத்தினம் (சென்னை டேர்டில்ஸ்), பெண்கள் பிரிவில் ரோஷினி (மதுரை)

குரூப் 3 ஆண்கள் பிரிவில் ஜாஷீம்ராயன் (சென்னை வேவ்ஸ்), பெண்கள் பிரிவில் சவுஜன்யா (சென்னை டேர்டில்ஸ்), சம்ருதா (கோவை).

குரூப் 4 ஆண்கள் பிரிவில் மிதுன் (திருப்பூர்), பெண்கள் பிரிவில் அஸ்வின்னா (திருப்பூர்).

குரூப் 5 ஆண்கள் பிரிவில் ஆரியசத்தார் (சென்னை டால்பின்), பெண்கள் பிரிவில் சாதனா (சென்னை டேர்டில்ஸ்). குரூப் 6 ஆண்கள் பிரிவில் தரூவ் (சென்னை டால்பின்), பெண்கள் பிரிவில் அன்னன்யா (தஞ்சாவூர்).

குரூப் 7 ஆண்கள் பிரிவில் யோகநிதி நடேசன் (சென்னை வேளச்சேரி), பெண்கள் பிரிவில் ராய்ஷா (நெல்லை டைட்டன்ஸ்).

குரூப் 8 ஆண்கள் பிரிவில் ஆப்ரின்சனோ (கன்னியாகுமரி), பெண்கள் பிரிவில் ஷிசிகா (நெல்லை டைட்டன்) ஆகியோர் தனிநபர் பட்டம் வென்றனர்.

பரிசளிப்பு விழா

மதுரை மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் பரிசளிப்பு விழா நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா மற்றும் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை செயலாளர் கண்ணன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்