இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்:காதலனை பார்க்க வந்த சென்னை மாணவி சேலத்தில் மீட்பு- போலீசார் விசாரணை

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலனை பார்க்க வந்த சென்னை மாணவி சேலத்தில் மீட்கப்பட்டாள்.

Update: 2023-03-10 22:33 GMT

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் வாலிபர் சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். இதை நம்பி சிறுமி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சேலத்திற்கு வந்தார். பின்னர் நள்ளிரவில் சிறுமி புதிய பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்து உள்ளார். குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது பெற்றோருக்கு தெரியாமல் சேலத்திற்கு காதலனை பார்க்க வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து பெற்றோரை சேலத்திற்கு வரவழைத்து, அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்