கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவு

கஞ்சா விற்ற 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-10-18 08:41 GMT

சென்னையை அடுத்த கண்ணகிநகர் வ.உ.சி. தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு கண்ணகிநகர் போலீசார் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்ணகிநகரைச் சேர்ந்த தமிழ் (வயது 25), மணி (25) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 2 பேரிடம் இருந்தும் சுமார் 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் சரவணன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான தமிழ், மணி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்கள் இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்