சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை - தூய்மை பணியாளர் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-05 08:54 GMT

சென்னை மணலி பகுதியை சேர்ந்த 49 வயது பெண், உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 27-ந்தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 30-ந்தேதி அறுவை சிகிச்சை முடிந்து இரவு படுக்கையில் இருந்த பெண்ணிடம், தூய்மை பணியாளர் பழனி (வயது 50) என்பவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். நர்சுகளின் உதவியுடன் இந்த சம்பவம் குறித்து ஆஸ்பத்திரி வளாக போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார்.

அதன்பேரில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த பழனியை, நேற்று திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்