மொபட்டுக்கு அபராதம் விதித்த சென்னை போலீசார்

வேலூரில் வீட்டில் நிறுத்தியிருக்கும் மொபட்டுக்கு செனனை போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2023-06-16 18:55 GMT

வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் மொபட் ஒன்று வைத்துள்ளார். அதை அவர் வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சுரேஷின் செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் அவர் போக்குவரத்து விதியை மீறியதாக அவரது வாகன பதிவு எண்ணை குறிப்பிட்டு சென்னை போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மொபட்டை நான் வீட்டில் இருந்து எடுத்து 3 நாட்கள் ஆகிறது. இந்தநிலையில் சென்னை போக்குவரத்து போலீசார் எனது வாகனத்துக்கு அபராதம் விதித்துள்ளனர். நான் வைத்திருப்பது மொபட். ஆனால் போலீசாரின் அபராத சீட்டில் கியர் வகையான மோட்டார்சைக்கிள் படம் உள்ளது.

இந்த குளறுபடிகளை களைந்து காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்