புதிய மைல் கல்லை எட்டிய சென்னை மெட்ரோ ரெயில் சேவை

சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

Update: 2024-01-02 07:54 GMT

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரெயிலில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இதனால் விழாக் கால சலுகை மற்றும் கூடுதல் நேரம் நீட்டிப்பு என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக 2023ம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது, கடந்தாண்டில் 3.01 கோடி பேர் அதிகம் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்