சென்னை மெட்ரோ - பறக்கும் ரெயில் சேவை விரைவில் இணைப்பு

சென்னை மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-08-31 03:00 GMT

சென்னை.

மின்சார ரெயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களை போல் மாற்ற சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரெயில், பறக்கும் ரெயில் சேவை விரைவில் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கும் இடையே விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு டெண்டர் உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரெயில்வே வாரியத்திடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.

மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திராநகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேம்படுத்தப்படும் ரெயில் நிலையங்களில் உள்ள 20,44,400 ச.மீ இடத்தில் உணவகங்கள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்