அகில இ்ந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன்

கரூரில் நடந்த அகில இ்ந்திய கூடைப்பந்து ேபாட்டி நிைறவு ெபற்றது. இதில், சென்னை இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

Update: 2023-05-27 19:03 GMT

கூைடப்பந்து ேபாட்டி

தனியார் நிறுவனங்கள் மற்றும் கரூர் கூடைப்பந்து கிளப்பும் இணைந்து நடத்தும் 63-ம் ஆண்டு அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், 9-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டியும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் ஆண்கள் போட்டியில் லோனாவிலா இந்தியன் நேவி, திருவனந்தபுரம் கே.எஸ்.இ.பி., பஞ்சாப் போலீஸ், டெல்லி இந்தியன் ரெயில்வே, பெங்களூரு பரோடா வங்கி, டெல்லி இந்தியன் ஏர்போர்ஸ், சென்னை டி.என்.பி.ஏ., சென்னை இந்தியன் வங்கி ஆகிய 8 அணிகளும், பெண்கள் போட்டியில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே, கொல்கத்தா கிழக்கு ரெயில்வே, சென்னை டி.என்.பி.ஏ. அணி, டெல்லி வடக்கு ரெயில்வே, கேரளா போலீஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடின.

இ்ந்தியன் வங்கி சாம்பியன்

இதில் பெண்கள் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியின் முடிவில் கொல்கத்தா கிழக்கு ரெயில்வே அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தன. முதல் பிடித்த கொல்கத்தா கிழக்கு ரெயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பிடித்த ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கப்பரிசும், 3-ம் இடத்தை பிடித்த டெல்லி வடக்கு ரெயில்வே அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4-ம் இடத்தை பிடித்த கேரளா போலீஸ் அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன.

ஆண்கள் பிரிவில் டெல்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இப்போட்டியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 56-52 என்ற புள்ளி கணக்கில் சென்னை இந்தியன் வங்கி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

பரிசுகள்

சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பிடித்த டெல்லி இந்தியன் ஏர்போர்ஸ் அணிக்கு ரூ.80 ஆயிரம் ரொக்கப்பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. பின்னர் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை கரூர் கூடைப்பந்து கிளப் தலைவர் விஎன்சி பாஸ்கர், செயலாளர் முகமது கமாலுதீன் உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்