சென்னை ஐஐடி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஐஐடி-யில் பயின்று வரும் வடமாநில மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை,
சென்னை ஐஐடி-யில் மேற்குவங்காளத்தை சேர்ந்த சச்சின்குமார் என்ற மாணவன் பயின்று வருகிறார். இவர் வேளச்சேரியில் நண்பர்களுடன் தங்கி பயின்று வருகிறார்.
இந்நிலையில், ஐஐடி மாணவன் சச்சின்குமார் நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேளச்சேரியில் நண்பர்களுடன் தங்கிருந்த சச்சின்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சென்னை ஐஐடி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.