சென்னை: சூளைமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை...!
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை,
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி குளோரி. பிரசாந்த் அப்பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரசாந்தின் மனைவி குளோரி கடந்த ஆண்டு (18.09.2021) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்த பின் ரவுடி பிரசாந்த் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவுடி பிரசாந்த் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளிலேயே கனவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.