சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் பகுதியளவு ரத்து
நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவைகள் பகுதியளவு இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
நெல்லை - மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு வந்தே பாரத் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியளவு இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர வந்தே பாரத் ரெயில் (வண்டி எண்.06067) நெல்லை - நாகர்கோவில் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வாராந்திர வந்தே பாரத் ரெயில் (06068) நாகர்கோவில் - நெல்லை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
எனவே, நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படுவதற்கு மாற்றாக நெல்லையிலிருந்து மாலை 3.58 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.