சென்னை சென்டிரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை சென்டிரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சென்டிரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று மாலை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1 மணிநேரத்திற்கு மேலாக ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.