சென்னை: சிறார் ஆபாச படங்களை இணையத்தில் விற்பனை செய்த வாலிபர் கைது
டெலிகிராம் செயலி மூலம் சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் டெலிகிராம் செயலி மூலம் சிறார் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர், சிறார் ஆபாச படங்களை டெலிகிராம் செயலில், 100 சிறார் ஆபாச படங்கள் 100 ரூபாய் எனவும், 250 வீடியோக்களை 150 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார், சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்ய பயன்படுத்திய இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.