செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எலவம்பட்டி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-07-06 18:47 GMT

திருப்பத்தூர் தாலுகா எலவம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை, முதல்கால யாகவேள்வி பூஜை, மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடந்தது.

மேளவாத்தியங்களுடன் தாய்வீட்டு சீர் வரிசை எடுத்து வந்தனர். பின்னர் திருப்பள்ளியெழுச்சி, தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்றது. விசேஷ சாந்தி, நாடி சந்தானம், மஹா பூர்ணா ஹூதி நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் கலசங்களை மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நிகழ்ச்சியில் நல்லதம்பி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், டி.கே.ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.காளியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செல்லியம்மன் கோவில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்