செல்லியம்மன் கோவில் குடமுழுக்கு

குத்தாலம் அருகே செல்லியம்மன் கோவில் குடமுழுக்கு

Update: 2023-06-02 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே காஞ்சிவாய் கிராமத்தில் புகழ்பெற்ற செல்லியம்மன் கருப்பையா சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவுசெய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து வந்தது. அதையடுத்து கோவில் திருப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து குடமுழுக்கு விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று பூர்ணாகுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கலசத்தை அடைந்தது. தொடர்ந்து வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காஞ்சிவாய் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்