செக்கடி பெரியசாமி, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா
செக்கடி பெரியசாமி, செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
நொய்யல் அருகே துக்காட்சி பிரசித்தி பெற்ற செக்கடி பெரியசாமி, செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி முதல் கட்டளைதாரர்களின் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கடந்த 11-ந்தேதி இரவு செக்கடி பெரியசாமி மற்றும் செல்லாண்டியம்மன் சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று முன் தினம் காலை பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலையில் செல்லாண்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.