100-வது பிறந்தநாள் காணும் பிரதமரின் தாயாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

100-வது பிறந்தநாள் காணும் பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-18 13:44 GMT

சென்னை,

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென், இன்று தனது வாழ்வின் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதையடுத்து தனது தாயாரான ஹீராபென்னின் பிறந்தநாளையொட்டி, காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து பெற்றார்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், 100-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அம்மா 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அம்மா மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் என் அம்மாவின் உடல்நிலை குறித்து நீங்கள் விசாரித்ததை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்