கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வெஸ்ட்புரூக் அருகே நேற்று காலை சிறுத்தை பூனை ஒன்று உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தைப்பூனையின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு சிறுத்தை பூனையின் உடல் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தைப்பூனை சாலையை கடக்க முயற்சி செய்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளது என்றனர்.