பண்ணாரி கோவில் அருகே சுவர் மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை
பண்ணாரி கோவில் அருகே சுவர் மீது உட்கார்ந்திருந்த சிறுத்தை;
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் பண்ணாரி கோவில் அருகே சத்தியமங்கலத்துக்கு செல்லும் ரோட்டில் சாலையோரத்தில் இருந்த மதில் சுவர் மீது சிறுத்தை ஒன்று உட்கார்ந்திருந்தது. இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வாகன ஓட்டிகள், சிறுத்தையை படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர் சிறுத்தையானது, சுவர் மீது அங்கும், இங்குமாக நடமாடியது. இதையடுத்து சிறிது நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.