தங்கும் விடுதிக்குள் புகுந்துபொருட்களை சேதப்படுத்திய வாலிபர் கைது
போடியில் தங்கும் விடுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போடி சுப்புராஜ் நகர் பகுதியில் கடந்த மாதம் புதிதாக பயணியர் தங்கும் விடுதி திறக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு வராத அந்த விடுதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த மின்விளக்கு, கதவு உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து நகராட்சி சார்பில் போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தங்கும் விடுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது, போடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.