சாத்தூர் நகரசபை கூட்டம்

சாத்தூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-27 19:28 GMT

சாத்தூர், 

சாத்தூர் நகரசபையின் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் அசோக், ஆணையாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். இரவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது என கவுன்சிலா்கள் புகார் தெரிவித்தனர். 8-வது வார்டு பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை அகற்றி விட்டு புதிய சுகாதார வளாகம் விரைவில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கவுன்சிலர் பொன்ராஜ் கூறினார். மதுரை பஸ் ஸ்டாப் அருகே உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து உடனே செயல்படுத்தவும், மின் மயான பணிகளை விரைவாக செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என 3-வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் கோரிக்கை விடுத்தார். 15-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர் கற்பகம் கூறினார். கவுன்சிலர் ஜமுனா கான்வென்ட் தெருவில் மின் மோட்டாருடன் கூடிய போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்றார். 22-வது வார்டு கவுன்சிலர் முருகன் சாலை ஓரங்களில் உள்ள இறைச்சி கடைகளில் ஆடு வதை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் இளவரசன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்