சாத்தான்குளம் அரசு மகளிர் தொழில் மேம்பாட்டுதுறை கருத்தரங்கு

சாத்தான்குளம் அரசு மகளிர் தொழில் மேம்பாட்டுதுறை கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-02-09 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் மேம்பாட்டுத் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தொழில் நிர்வாகவியல் துறை பேராசிரியை சண்முகசுந்தரி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி செய்யது முகமது கலந்துகொண்டு பேசினார். இந்த கருத்தரங்கில் மூன்றாமாண்டு மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். மாணவி ராமலெட்சுமி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்