கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2022-11-07 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே கல்லல் நற்கனி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய குதிரை வண்டி பந்தயம், சின்ன குதிரை வண்டி பந்தயம் என இருபிரிவாக போட்டிகள் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியகுதிரை வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டன.

இந்த போட்டியில் முதல் பரிசை பட்டுக்கோட்டை மாஸ்டர் பாலா குதிரை வண்டியும், 2-வது பரிசை திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த நம்பி உதயசூரியன் குதிரை வண்டியும், 3-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் குதிரை வண்டியும், 4-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் மற்றும் புறாமணி வண்டியும் பெற்றன.

பரிசுகள்

இதையடுத்து நடைபெற்ற சின்ன குதிரை வண்டி பந்தயத்தில் 14 வண்டிகள் கலந்துகொண்டன. இதில், முதல் பரிசை செவல்கண்மாய் ராமலிங்கம் வண்டியும், 2-வது பரிசை குந்தம்பட்டு பாக்கியநாதன் வண்டியும், 3-வது பரிசை கல்லல் வெல்கம் பிராய்லர்ஸ் வண்டியும், 4-வது பரிசை அறந்தாங்கி முத்துக்குமார் வண்டியும் பெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த குதிரை வண்டி பந்தயத்தை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்