விருத்தாசலம் அருகே ஆதிசக்தீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்

விருத்தாசலம் அருகே ஆதிசக்தீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-24 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இக்கோவில் தேர் பழுதடைந்ததால், கடந்த 60 ஆண்டுகளாக சித்திரை பவுர்ணமி தினத்தன்று பல்லக்கில் சாமி வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பொதுநிதியில் இருந்து, ரூ. 19 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிதாக தேர் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தேர் திருப்பணி முடிந்த நிலையில், நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் நடைபெற்ற தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் செயல் அலுவலர் பழனியம்மாள், விருத்தகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா, ஆய்வாளர்கள் லட்சுமி நாராயணன், சீனிவாசன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் செல்வி சிவகண்டன், கணக்காளர் கொளஞ்சிநாதன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்