லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்

திண்டிவனம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டத்தை சி.வி.சண்முகம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-08 18:45 GMT
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்

திண்டிவனம்:

திண்டிவனத்தில் பிரசித்திபெற்ற கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத தேரோட்ட விழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாலை அம்ச வாகனத்திலும், 1-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 2-ம் தேதி காலை கருட சேவையும், மாலையில் அனுமந்த வாகனத்திலும், 3-ந் தேதி காலை பல்லக்கிலும், மாலை நாக வாகனத்திலும், 4-ந் தேதி காலை பல்லக்கிலும், மாலை கருட சேவையும், 5-ந் தேதி காலை சூர்ணாபிஷேகமும், மாலை யானை வாகனத்திலும், 6-ந் தேதி காலை பல்லக்கிலும், மாலை சூரிய பிரபை சந்திர பிரபையிலும் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை பல்லக்கிலும், மாலை குதிரை வாகனத்தில் சாமி வீதி உலாவும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளத்துடன் வெளியே எடுத்து வரப்பட்டனர். அங்கு அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் சுவாமி அமரவைக்கப்பட்டார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். பக்தர்கள் மத்தியில் தேர் அசைந்தாடியபடி சென்றது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு குடிநீர், மோர், குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்

விழாவில் வக்கீல் தீனதயாளன், பி.ஆர்.சுப்பிரமணி செட்டி ஜவுளி கடை உரிமையாளர் ரங்கமன்னார் செட்டியார், சரத், ராம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் தியாகராஜன் செட்டியார், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன், கே.எஸ்.பி. ஜவுளி ரெடிமேட்ஸ் உரிமையாளர் தினகரன் செட்டியார், கார்த்திக் ஸ்டுடியோ உரிமையாளர் வக்கீல் கார்த்திக், ஓம் சக்தி ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளர் சக்திவேல், அப்பர் சுவாமி உழவார பணி குழு தலைவர் ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் டி.கே.குமார், சாம்ராஜ் லேப் உரிமையாளர் சம்பத், பால்பாண்டியன் பாத்திரக்கடை உரிமையாளர் ரமேஷ், பி. என்.ஆர்.லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் நாராயணன் ரெட்டியார், சரவணன், கே.ஆர்.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர் சுப்பராயலு உள்பட ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதர் பட்டாட்சாரியார் செய்திருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சூரிய நாராயணன், ஆய்வாளர் தினேஷ், கணக்காளர் சங்கர், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்