தாரமங்கலத்தில் கைலாசநாதர் கோவில் தேரோட்டம்
தாரமங்கலத்தில் கைலாசநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
தாரமங்கலம்:
தாரமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் தைபூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை தொடங்கியது. முன்னதாக கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். பத்திரகாளியம்மன் தேர் முன் செல்ல, கைலாசநாதர் பெரிய தேர் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது. பின்னர் அண்ணா சிலை அருகே தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 2-வது நாள் தேரோட்டம் நடக்கிறது.