ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேரோட்டம்

சிவகாசியில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-06 18:49 GMT

சிவகாசி, 

சிவகாசியில் உள்ள சிவன் கோவில், முருகன் கோவில், கடைக்கோவில்களில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரித்து தேரில் செவ்வந்திபூ அலங்காரம் செய்யப்பட்ட வீதி உலா வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேர் திருவிழா நடைபெற்றது. 3 கோவில்களில் இருந்து வந்த தேர்கள் ரதவீதிகளில் சுற்றி வந்து தெற்குரதவீதியில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சிவகாசி பகுதியில் உள்ள பக்தர்கள் திரண்டு வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவுக்காக சிவகாசியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் குறிப்பாக பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. சாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. 3 கோவில் தேர்கள் முருகன் கோவில் அருகே வரும் போது சாலை சேதமடைந்த பகுதியை கடந்து பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்