வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-04-02 17:27 GMT

திருவலம் பொன்னை ஆற்றங்கரையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான வில்வநாதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 27-ந் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் தனுமத்யம்பாள் உடனுறை வில்வநாதீஸ்வரை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுந்தனர். தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவைகளை வீசி நேர்த்திகடன் செலுத்தி சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்