தேருக்கு சாரம் கட்டும் பணி

குலசேகரநாத சுவாமி கோவில் தேருக்கு சாரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-31 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தர்ம சம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவானது ஆண்டு தோறும் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மிக முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளில் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதனை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

இந்நிலையில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 26-ந் தேதி நடந்தது. தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது.

தைப்பூச தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேர் பராமரிப்பு, சாரம் கட்டுதல் மற்றும் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்