பொன்னேரி புனித தோமையர் ஆலய தேர்பவனி

பொன்னேரி புனித தோமையர் ஆலய தேர்பவனி நடைபெற்றது.;

Update: 2022-07-05 17:16 GMT


பெண்ணாடம்,

பெண்ணாடம் அடுத்த பெ,பொன்னேரி கிராமத்தில் உள்ள புனித தோமையர் ஆலய பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. தினசரி சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து, திருப்பலி நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் ஆலய பங்கு தந்தை சார்லஸ் எடிசன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்து, தேர்பவனி நடைபெற்றது.


இதில் முதல் தேராக மிக்கல் அதிது தூதர் தேரும், 2-வதாக அன்னை மரியாள் தேர், 3-வது புனித தோமையர் தேரும் பவனி வரும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்