தேவூரில்புனித ஆரோக்கிய மாதா ஆலய தேர் பவனி

Update:2023-09-11 01:27 IST

தேவூர்

தேவூரில் புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் பவனி நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளாளபாளையம் புனித மரியா ஆலய பங்குத்தந்தை ஆனந்தராஜ், திருச்செங்கோடு புனித மரியன்னை ஆலய பங்குத்தந்தை எட்வர்டு ததேயுஸ், சின்னகொல்லப்பட்டி சகாயராஜ், மேட்டூர் பங்குத்தந்தை இருதயசெல்வம், பவானி பங்குத்தந்தை பெலிக்ஸ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தேவூர், மேட்டுக்கடை, மயிலம்பட்டி வழியாக மேளதாளத்தத்துடன் தேர் பவனி சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். நற்கருணை ஆசிர் மற்றும் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்