திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டும் தேர்த்திருவிழாவான நேற்றுமுன்தினம் சிகர நிகழ்ச்சியாக அர்த்தநாரீஸ்வரர் தேருக்கு எழுந்தருளி வீதி உலா வரும் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் நேற்று 2-ம் நாளாக தேர் வடம் பிடிக்கப்பட்டு பூக்கடை கார்னரில் இருந்து புறப்பட்டு தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக வந்து வடக்கு ரத வீதி பழைய பஸ் நிலையம் அருகே நிலை கொண்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று (திங்கட்கிழமை) இங்கிருந்து புறப்பட்டு வடக்கு வீதி வழியாக சென்று தேர் நிலை சேர்கிறது.