ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேரோட்டம்

ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-06-01 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று 9-ம் திருநாளையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. பெரிய தேரில் பிரியாவிடை உடன் ஆதிரெத்தினேசுவரரும், சிறிய தேரில் சினேகவல்லி அம்மனும், சிறிய சப்பரங்களில் விநாயகர், வள்ளி தெய்வானைசமேத பாலசுப்பிரமணியரும் தேரோடும் வீதிகளில் வலம் வந்தனர். மாலை 3.30 மணி அளவில் தொடங்கிய தேரோட்டம் 6 மணி அளவில் தேர் நிலைக்கு சென்றடைந்தது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

அதனை தொடர்ந்து சுவாமி-அம்மன் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. வீதிகள் தோறும் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெ ற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்