திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
சிங்கம்புணரி
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம்
சிங்கம்புணரி அருகே திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை, பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருக்கல்யாணம் நிகழ்ச்சி கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
நேற்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. உற்சவமூர்த்திகள் தேரில் எழுந்தருளினர்.அதிகாலை 6 மணியளவில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விநாயகர், முருகர், குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்றநாதர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், சண்டிகேஸ்வரர் சப்பர தேரிலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. பின்னர் உற்சவமூர்த்திகளுக்கு கோவில் முதல் ஸ்தானிகர் மண்டல கமிட்டி சிவாச்சாரியார் உமாபதி சிவாச்சாரியார் குழுவினர் தீபாராதனை காண்பித்தனர். அப்போது வாழைப்பழங்களை வீசியும், தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.