திரு உத்தரகோசமங்கை கோவிலில் நாளை தேரோட்டம்

திரு உத்தரகோசமங்கை கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.

Update: 2023-05-02 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-வது நாளான இன்று சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் 9-வது நிகழ்ச்சியான நாளை மாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக 5-ந் தேதி தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. நாளை தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கோவிலின் தீர்த்தகுளம் அருகே ரதவீதி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரில் கூடாரம் மற்றும் அலங்கார துணிகள் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. உத்தரகோசமங்கை கோவிலில் புதிதாக செய்யப்பட்ட தேரில் கடந்த ஆண்டுதான் முதல் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த முறை புதிய தேரில் அம்பாள் எழுந்தருள தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்