காளையார்கோவில் அருகேஉருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் 4-ந் தேதி நடக்கிறது

காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது

Update: 2023-03-28 18:45 GMT

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கிராமத்தில், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 4-ந்தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்காக முதல் நாள் இரவு பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கியிருந்து தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள். 5-ந்தேதி இரவு பூப்பல்லக்கு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் சமஸ்தான மேலாளர் இளங்கோ, காளையார்கோவில் கண்காணிப்பாளர் பாலசரவணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்