பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மதிய வேளையில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் அவதியடைந்தனர். மேலும் காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிப்பதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே வெயில் அதிகரித்து காணப்பட்டது. மாலை வேளையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடர்ந்து திடீரென சாரல் மழை பெய்தது. சிறிது நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.