20 கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றம்
20 கிராம நிர்வாக அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.;
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்த 20 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமையில் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னுரிமை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கை அடிப்படையில் 20 கிராம நிர்வாக அலுவலர்களை பணி மாறுதல் செய்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு உத்தரவிட்டுள்ளார்.