பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-பாண்டிச்சேரி இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி-பாண்டிச்சேரி இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருச்சி ரெயில் நிலையம்-விழுப்புரம் ரெயில் நிலையம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* திருப்பதி-பாண்டிச்சேரி(வண்டி எண்: 16111) இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
* புதுச்சேரி-திருப்பதி(16112) இடையே மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் புதுச்சேரி மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் புதுச்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.
* மேல்மருவத்தூர்-விழுப்புரம்(06725) இடையே பகல் 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விக்கிரவாண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
* விழுப்புரம்-மேல்மருவத்தூர்(06726) இடையே மதியம் 1.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
* மயிலாடுதுறை-விழுப்புரம்(06690) இடையே காலை 6 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலூர் மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கடலூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
* விழுப்புரம்-மயிலாடுதுறை(06691) இடையே மதியம் 2.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 19, 20, 21-ந்தேதிகளில் கடலூர் மற்றும் விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கடலூரில் இருந்து மதியம் 3.30 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது