திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-31 16:22 GMT

திருச்சி,

நெல்லை-மேலப்பாளையம் ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. அதன்படி வண்டி எண்: 22627 திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து காலை 7.20 புறப்பட்டு 30 நிமிடம் தாமதமாக மாலை 3.50 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக வண்டி எண்: 22628 திருவனந்தபுரத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு 15 நிமிடம் தாமதமாக இரவு 8 மணிக்கு வந்தடையும். இந்த மாற்றம் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இதேபோல் வண்டி எண்: 20691 தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் 30 நிமிடம் தாமதமாக செல்லும். இந்த மாற்றம் வருகிற 2,3,5,6-ந்தேதிகளில் நடைமுறையில் இருக்கும். இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்