பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சூரமங்கலம்:
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி ெரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சேலம் வழியாக இயக்கப்படும் ெரயிலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காடு- சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 22652) வருகிற 28-ந் தேதி திண்டுக்கல், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ெரயில் கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுர், பெரம்பூர் வழியாக இயக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.